tamilnadu

img

விளையாட்டுக்கதிர் -நிழலல்ல நிஜம்!

கால்பந்து காதலர்களை அதிகம் கொண்ட நாடு எது என்றால் அது அர்ஜெண்டினா. அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் உண்டு. மூன்றாம் பால் இனத்தவர்களின் உரிமைகள் காப்பதில் அந்த நாட்டுக்கு நிகர் அந்த நாடே. தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களின் திருமணத்தை முதன்முதலாக 2012 ஆம் ஆண்டில் அங்கீகரித்ததும் அர்ஜெண்டினாதான்.  தனது ‘பால்’ அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்பாடுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கி முற்போக்கு நாடுகளில் முதன்மையானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வரிசையில், பெண்கள் கால்பந்து அணியில் விளையாடுவதற்கு மூன்றாம் பாலினத்தவருக்கு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அனுமதி அளித்திருப்பது மேலும் ஒரு மைல் கல்லாகும்.
அலங்காரமல்ல...
லயனல் மெசியை ரோல் மாடலாக கொண்ட 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அந்தப் பெண்மணி கால்பந்தை காலில் பச்சை குத்திக்கொண்டு, நீண்ட தலைமுடியை கட்டிக் கொண்டு மைதானத்தில் கால்பந்தை உதைக்கும்  ‘ஸ்டைலே’ தனி ரகம். தொழில்முறையாக கால்பந்து விளையாடும் முதல் திருநங்கை திகழும் மாரா கோமஸ் வசிப்பது சிறு குடிசையாக இருந்தாலும் டஜன் கணக்கான கோப்பை களும் கேடயங்களும் மர அலமாரிகளை அலங்கரிக் கின்றன. இவைஅனைத்தும் பல தடைகளையும் எதிர்கொண்ட கடின பயணத்தில் கிடைத்தவை களாகும். மிக எளிதில் கிடைக்கவில்லை என்பதால் இதை நினைவு பொருட்களாக பார்க்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கிறார் மாரோ கோம்ஸ்.
சமூக ஒடுக்குமுறை...
அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாரா கோமஸ். சிறுவயதிலேயே திருநங்கையாக மாறியவர். அப்போதே சமூகத்தால் ஒதுக்கப்பட்டார். மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிலிருந்து மீண்டு வெளியில் வருவதற்கு உதவியாக இருந்தது கால்பந்து மட்டுமே.
வளர்ந்த கதை...
பத்து வயதிலிருந்தே கேள்விகளைக் கேட்க தொடங்கிய கரோலின், “தனது தாயாரிடம் நான் ஒரு பெண்ணாக மாற விரும்புகிறேன். நீங்க அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நான் வீட்டை விட்டு வெளியேற போகிறேன்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே அந்த குடும்பத்தில் நான்கு பெண் குழந்தைகள் இருந்த நிலையிலும், தாயார் அதை ஏற்றுக்கொண்டார். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. 13 வயதில் பெண்ணாக மாறியதோடு தனது பெயரையும் மாரா கோம்ஸ் என்று மாற்றிக் கொண்டார். பெண்ணாக மாறிய போது தனது சொந்த கிராமத்தில் பலராலும் கேலி, கிண்டல், துன்பங்களுக்கும் உள்ளனர். பக்கத்து வீட்டிற்கு சற்று தூரத்தில் காலியாக இருந்த இடத்தில் மற்ற குழந்தைக ளோடு கால் பந்தை உதைக்க ஆரம்பித்தது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தினசரி கால்பந்தை விளையாடு வதை வழக்கமாக கொண்டுள்ளார். பாலின மாற்றத்தின் உணர்ச்சிகள் அவரது உடல்நிலையில் உளவியல் ரீதியாக பாதிப்பை உண்டாக்கியது. கால்பந்து விளையாடுவதன் மூலம் அதிலிருந்து முழுமையாக விடுபட்ட முடிந்தது.
அங்கீகாரம்...
பதினெட்டாவது வயதில், சட்டத்தின் ஆதரவுடன் மூன்றாம் பாலினத்திற்கான அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார். மெல்ல மெல்ல உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியதும் ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்தது. மின்னொளி ஆட்டமொன்றில் பங்கேற்றபோது அவரது ஆட்டத்தில் மேலும் மெருகேறிது. காரணம், அந்த ஆட்டத்தில் பாலுணர்வு ஒரு பாதகமாக இருந்ததாக புகார் எழுந்தது. மிக மோசமான தினங்களில் ஒன்று என்றாலும் அன்றைய ஆட்டமே சிறப்பு பயிற்சிக்கும் வித்திட்டது. 22 வயதில் உள்ளூரில் பெண்கள் லீக் போட்டிகளில் லா பிளாட்டா டொராண்டோவில் விளையாடிய முதல் அமெச்சூர் கால்பந்து கிளப்பில் 10 ஆம் நம்பர் ஜெர்சியுடன் விளையாடி வந்த மாரா கோம்ஸ் ஏ டிவிஷன் கால்பந்து தொடர்களில் பங்கேற்க அனுமதி கோரப்பட்டது. திருநங்கை விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழு வகுத்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் பச்சை கொடி காட்டி விட்டது. இதனையடுத்து, வில்லா சான் கார்லோஸ் கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டது.
எதிரும் புதிரும்...
“ இந்த ஒப்பந்தம் எனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும். கால்பந்து தான் எனக்கு உலகம். லீக் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் அதற்காக தீவிர பயிற்சி செய்து வருகிறேன் நிச்சயம் நன்றாக விளையாடுவேன். இதன்மூலம் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது” என மாரா கோம்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மூன்றாம் பாலினத்தவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் அந்நாட்டு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை வரவேற்று இருக்கும் சில நிபுணர்கள் “மூன்றாம் பாலினத்தவராக மாறிய சில பெண்களிடம் அதிக அளவு தசை சக்தியும் இருப்பதால் பெண்கள் லீக் போட்டியில் ஜொலிக்க முடியும்” என்கின்றனர். மூன்றாம் பாலினத்தவர் பெண்கள் கால்பந்து அணியில் விளையாடு வதற்கு அனுமதி அளித்திருப்பது பலரும் வரவேற்பு இருந்தாலும் சில எதிர்ப்புகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆண்-பெண்- திருநங்கைகளின் விஷயத்தில் டெஸ்டோஸ்டி ரோன் அளவை முதல் போட்டியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்தாக வேண்டும் என்பதால் விளையாட்டு வீரர்களின் உரிமைகள், போட்டிகளில் ஒருங்கிணைப்பதற்கான சமூக கோரிக்கைகள் பெரும் சவாலாக விளங்குகிறது. இதனால் விளையாட்டு களில் பெண்களின் உரிமைகள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் விளையாட்டு மருத்துவரான முன்னாள் கால்பந்து வீரர் ஜுவான் மானுவல் ஹெர்பல்லா கூறியிருக்கிறார். உலகம் முழுவதிலும் வன்முறை, பாகுபாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குமாரா கோமஸ்க்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மரடோனா முதல் லியோனல் மெஸ்ஸி வரை உலகின் மிகச்சிறந்த கால்பந்து நட்சத்திரங்களை உருவாக்கிய கால்பந்து காதலர்கள் நிறைந்த நாட்டில் பெண்கள் கால்பந்து அணியில் விளையாடும் முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மாரா கோம்ஸ் வெற்றிப்பயணம் தொடர அனைவரும் வாழ்த்துவோம்.

;