கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பார்டி அமெரிக்காவின் சோபியா கெனினை 6-3,3-6,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசின் சினியாகோவாவை அமெரிக்காவின் மாடின்சன் கீஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பந்தாடி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.