ஜப்பானின் கியூஷூ தீவு பகுதியில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷூ தீவில் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை