tamilnadu

ஏரியில் மண் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

சேலம், ஜூன் 1- சேலம் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள ஏரியில் மரம் மற்றும் மண்ணை கொள்ளை யடிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற் றும் மாவட்ட வனப்பாதுகாவலருக்கு அனுப் பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், சேனைப்பாளையம் ஊராட்சியில் உள்ள பாட்டப்பன் கோவில் பின்புறம் பொரசாங் குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மண்ணை மர்மநபர்கள் சிலர் இயந்திரங்கள் மூலம் முறைகேடாக அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் ஏரியில் உள்ள மரங்கள் தானாக கீழே விழும் நிலை உள்ளது. மேலும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி யன்று ஏரியில் முறைகேடாக மண்ணை அள்ளுவதை அறிந்த ஊர்பொதுமக்கள் மார்ச் 13 ஆம் தேதியன்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை . எனவே, பொரசாங்குட்டை ஏரியில் உள்ள மரங்களை பாதுகாப்பதோடு, திருட் டுத்தனமாக மண்ணை அள்ளி விற்பனை செய்வதையும் தடுத்திட வேண்டும். மேலும், மரங்களை வெட்டியும் மண்ணை அள்ளி விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்படி யான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ் வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;