சேலம் மேற்கு நகர் அரியாக்கவுண்டம்பட்டி பகுதியில் சனியன்று கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், கிளை செயலாளர்கள் எம்.மூர்த்தி, வி.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.