ஏற்காடு, நவ. 24- ஏற்காட்டில் சவுக்கு நாற்றங்கால் அமைத்து விதைப்பு பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பிரதானமாக காப்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. இக்காப்பி தோட்டங் களில் ஊடு பயிராக சவுக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தோட்டக்கலைத் துறை மூலம் சவுக்கு நாற்றுகள் மானிய விலையில் வழங்கப் பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் வழங்குவ தற்காக ஏற்காடு, தாவரவியல் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ள நாற்றங்காலில் 80 ஆயிரம் சவுக்கு விதைகள் விதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் நில விபரங்களை அளித்து நாற்றுகளை பெறுமாறு தோட்டக்கலை துறை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.