tamilnadu

img

சேலம் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள் - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!

சேலம் கோட்டை அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் கழிவறையை பராமரித்தது, குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது தொடர்பாக புகார் அளித்த மாணவிகளை தண்டித்ததை எதிர்த்து, சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குறைகளை கேட்டறிந்தனர். இந்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.