tamilnadu

img

தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஆவேச மறியல் - கைது

சேலம், ஜன.30- சேலம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி வாலிபர்  சங்கம் தலைமையில் போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்கள் உள்ளிட் டோர் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டனர். சேலம் அருகே எருமாபாளையம் காட்டுமரகுட்டை பகுதியில் பட்டிய லினத்தை சேர்ந்த சுமார் 40 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து சென்று வர கடந்த பல ஆண்டுகா லமாக விவசாய நிலத்தை ஒட்டிய  பாதையை பயன்படுத்தி வந்துள்ள னர். இந்த நிலையில் இந்தப்பா தையை அடைத்து தனிநபர் ஒருவர் தனது வீட்டையொட்டி சுவர் எழுப்ப  முயற்சி மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் சார்பில் பாதைகோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொதுமக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலை யில் இந்த உத்தரவை வருவாய்த் துறையினர் அமல்படுத்தவில்லை. இதனால் இப்பாதையை பயன்ப டுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். இதைத்தொடர்ந்து, இந்த தீண் டாமை சுவர் பிரச்சனைக்கு தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரி கள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு  நேரடியாக வர வேண்டுமென  கோரி வியாழனன்று இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் தலை மையில் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத வருவாய் துறை அதிகாரிகள், கள ஆய்வு செய்யக்கூட நேரில் வரா ததை கண்டித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு குவிக் கப்பட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு தலைமை தாங் கிய வாலிபர் சங்க நிர்வாகிகளை  கடுமையாகத் தாக்கி குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றினர். மேலும், இப்போராட்டத்தில் பங் கேற்ற சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், சிபிஎம் மாநகர கிழக்கு செயலாளர் ரமணி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் கந்தசாமி, வாலி பர் சங்க கிழக்கு மாநகர தலை வர் பிரபாகரன், செயலாளர் பெரிய சாமி  மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த  பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரப ரப்பான சூழல் நிலவி வருகிறது.

;