tamilnadu

img

மகளிர் இடஒதுக்கீட்டை அமலாக்குவோம்! தமிழக பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உறுதி

சேலம், ஏப். 12-மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் மக்கள் நலன்காக்கும் திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படும் என்றும் தமிழக பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.17வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 12 வெள்ளியன்று தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். பெங்களூரிலிருந்து தனி ஹெலி காப்டர் மூலம் தமிழகம் வந்த அவர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு மையங்களில் நடை பெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி னார். தமிழகத்தில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்தியஜனநாயக கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளது வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று உரையாற்றினார்.


ராகுல் காந்தி தமது உரையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது என்றார். மாறாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கைமுழுக்க வெளிப்படையாக இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்களை பிரதி பலிப்பதாக அமைந்துள்ளதாகவும், நீட்தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாகவும், இளம் திறமையானவர்கள் தற்கொலைசெய்து கொள்வதை தடுக்கும் வகை யில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், நீட் தேர்வு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள லாம் என்றும் கூறினார்.இதைப் போன்ற மக்களின் குரல் களை கேட்டு தீர்வு காண்பதற்கும் கருத்துபரிமாற்றத்திற்கும் பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும் கூறினார்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரே நாள் இரவில் இந்திய பொரு ளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டதாக சாடிய ராகுல் காந்தி, தமிழகத்தில் திருப்பூரில் பின்னலாடைத் தொழில், காஞ்சிபுரம் பட்டு நெசவு மற்றும் உற்பத்தித் துறையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது; பண மதிப்பிழப்பு செய்யலாமா என ஒருவரிடம் கூட பிரதமர் கருத்து கேட்கவில்லை; ஒரு குழந்தையிடம் கேட்டி ருந்தால் கூட தேவையில்லை என்று அந்த குழந்தை கூறியிருக்கும் என்றார்.


காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன், இந்தியா முழுவதிலும் உள்ள 20 சதவீத ஏழை மக்கள் கிராமம்கிராமமாக, தெருத் தெருவாக கணக் கெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதந் தோறும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்; பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் எனத் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த திட்டம்செயல்படுத்தப்படும் எனவும், வறுமையை ஒழிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் உலக நாடுகளுக்கே முன் உதாரணமாக திகழும் எனவும் தெரிவித்தார்.நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். மத்திய அரசுப் பணிகளில் பெண் களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பப்படாத 22 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 10 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

;