மதுரை:
தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள மனம்காத்தான் கிராமத் திற்கான பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி அக்கிராமத்தினர் கடந்த 6.3.2017-இல் கயத்தாறு-தேவர்குளம் பிரதான சாலையில்மறியலில் ஈடுபட்டுள்ளனர். கயத்தாறு காவல்துறையினர் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கின்இறுதி அறிக்கை கோவில்பட்டி ஜேஎம் இரண்டாவது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி, பீர் மைதீன், அல்லாபிச்சை, உள்ளிட்ட எட்டு பேர்உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தனர்.இந்த மனுவை சனிக்கிழமையன்று விசாரித்த நீதிபதிஜி.இளங்கோவன் பிறப்பித்தஉத்தரவு. “மனுதாரர்கள் தங்கள் கிராமத்திற்கான பொதுச் சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரி தான்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதைசட்டவிரோதம் என்று கூறமுடியாது. தங்களின் பொதுத்தேவைக்காக போராட ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமைஉண்டு. குடிநீர், உணவுப் பொருள்தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை சட்டவிரோதமானதாக கருதமுடியாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் கூறியுள் ளது. இந்தப் போராட்டத்தை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.