tamilnadu

img

தமிழகத்தில் அரசு திட்ட பணிகள் தொய்வாக நடைபெறுகிறது பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சேலம், ஐன. 22- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் அரசு திட்ட பணிகள் தொய்வாக நடைபெறுவதாக தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் தலை மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்டப் பேரவை, பொது கணக்கு குழுவினர் சேலம் மாவட்டத்தில் மக்கள் நலத் திட்டங்க ளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவி னங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதி மற்றும் செலவினங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் துரை முருகன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுரு கன் தெரிவித்ததாவது, மக்கள் நலத் திட்டங் களுக்காக சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் தமிழகத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்தும் செல வினங்கள் குறித்தும், பொது கணக்கு குழு தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த அவர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் திட்டப் பணி கள் தொய்வாக நடைபெற்று வருவதாக குற் றஞ்சாட்டினார். கொடுக்கப்பட்ட நிதியை  முறையாக  செலவு செய்யாமல்  ஊழலில் அதி காரிகள் யாரேனும் ஈடுபட்டது தெரிய வந் தால்  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் தெரி வித்தார் .மேலும் ஆய்வு குறித்து தற் போது வெளியே தெரிவிக்க இயலாது என வும் இறுதியாக சட்டமன்றத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதா கவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஸ்,மாநகர காவல் துறை தலைவர் செந்தில்குமார்,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொது கணக்கு குழு உறுப்பி னர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;