tamilnadu

img

சேலத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

சேலம், மே 11- சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து தனியார் பள்ளி பேருந்துகளை சேலம் கோட்டாட்சியர் நெடுஞ்செழியன் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் மேற்பார்வையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சேலம் ஜவகர் திடலில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இதற்காக வரவழைக்கப்பட்டு தனித்தனியே ஒவ்வொரு பகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் தரக்குறைவாகவோ, அரசு விதிமுறைகளின் படி வசதிகள் குறைவாக உள்ள பேருந்துகள் தகுதி நீக்கம் செய்து வருகின்றனர். சேலத்தில் 91 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. வருகின்ற 30 ஆம் தேதி வரை பள்ளிப்பேருந்துகள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் 2,128 பள்ளிப் பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதில், தரம் குறைந்த பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்படும் என சேலம் கோட்டாட்சியர் செழியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறும்போது, இந்த ஆய்வில் அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளதா, விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், பள்ளி வாகனங்களின் விபத்தை குறைக்க இது போன்ற தொடர்நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தொடர்ந்து நடைபெறும். மேலும் தரக்கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வாகனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

;