tamilnadu

img

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

இளம்பிள்ளை, பிப். 6- இளம்பிள்ளை அருகே ராமாபுரத்தில் புதிய அங்கன் வாடி மையம் திறப்புவிழா நடைபெற்றது  சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி  ஊராட்சி, ராமாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தின் கீழ்  ரூ.8.50 லட்சம் மதிப்பில்  புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பி னர் மனோன்மணி வியாழனன்று ரிப்பன் வெட்டி திறந்து  வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா, ராமாபுரம் தொடக்கப்பள்ளி தலைமை  ஆசிரியர் ஜெயசித்ரா,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பழனிசாமி, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் பிரேமலதா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.