சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் பல்வேறு வரிகள் செலுத்தாமல் உள்ளனர் .
இது குறித்து இடங்கணசாலை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை : இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் வசிப்போர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி , தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை, கடை வாடகை தொகை முதலானவற்றை காலதாமதம் செய்யாமல் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொம்கிறோம் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.