tamilnadu

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

மேட்டூர்:
ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப் படியாக அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு உள்பட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை முற்றிலுமாக நிரம்பி உள்ளது. கபினி அணைக்கும், கிருஷ்ணசாகர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வரும் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.2 அணைகளில் இருந்தும் மொத்தம் 36 ஆயிரத்து 533 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் கடந்த 24 -ந் தேதி ஒகேனக்கல்லுக்கு வந்தடைந் தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கலில் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.திங்களன்று (ஜூலை 26) நீர்வரத்து 34 ஆயிரத்து 144 கன அடியாக வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

;