tamilnadu

ஜிஎஸ்டி வரியை நீக்க ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள்

சேலம், ஜூன் 8-  தமிழக அரசு அனுமதி வழங்கியதை யடுத்து சேலத்தில் உணவகங்கள் செயல் படத் துவங்கியுள்ள நிலையில் உணவுகள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசு அனுமதி வழங்கியதைய டுத்து சேலத்தில் 75 நாட்களுக்குப் பிறகு உணவகங்கள் செயல்படத் துவங்கியுள் ளது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை சிறு மற்றும் பெரு உணவகங்கள் என 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில தொழி லாளர்கள் பெரும்பாலானோர் தற்போது இல்லாததால் 40 சதவிகித உணவகங்கள் திறக்கப்படவில்லை.

60 சதவிகித உணவ கங்கள் மட்டுமே இன்று செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 50 சதவிகித வாடிக்கையா ளர்கள் மட்டுமே அமர்ந்து உண்ண அனு மதிக்கப்படுகிறார்கள். மேலும், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தற் போது உணவகங்கள் செயல்படத் தொடங் கியுள்ளதால், உணவு மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என  ணவக உரிமையாளர்கள் அரசுக்கு வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

;