tamilnadu

img

நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம், ஜிஎஸ்டி வரி... சுப்பிரமணியசாமி கடும் விமர்சனம்

ஹைதராபாத்:
“மத்திய அரசு கொண்டுவந்த சரக்குமற்றும் சேவை வரிதான் (ஜிஎஸ்டி) 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார்.பிரக்யா பாரதி என்ற அமைப்பின் சார்பில், “2030-க்குள் இந்தியா பொருளாதார வல்லரசு” என்ற தலைப்பில், ஹைதராபாத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசுகையில்தான், சுப்பிரமணியசாமி இவ் வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியிருப்பதாவது:இந்தியா தற்போது தேவைப் பற்றாக் குறையால் திண்டாடுகிறது. அதாவது மக்கள் கையில் செலவு செய்யப் பணம் இல்லை. அடுத்த 10 ஆண்டுக்கு 10 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருந்தால் தான் இந்தியா 2030-ஆம் ஆண்டில்பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும். மாறாக, இப்போது இருக்கும் வேகத் தில் சென்றால், 50 ஆண்டுகளுக்குப் பின்புதான் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நம்மால் சவால் விடுக்க முடியும்.வருமானவரி மூலம், முதலீட்டாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் எதுவென்றால்ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்ததுதான். மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி மிகவும் குழப்பமானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாதது. எந்த படிவத்தை நிரப்புவது என்று கூட யாருக்கும் தெரியவில்லை.ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருந்து ஒருவர் என்னிடம் வந்து, எங் கள் பகுதியில் மின்சாரமே இல்லை எவ்வாறு நாங்கள் ஜிஎஸ்டி படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது என்று கேட்டார். நான் ‘முதலில் உன்தலைக்குள் ஏற்று, அதன்பின் பிரதமர்மோடியிடம் இதைக் கூறு’ என்றேன்.நிர்மலா சீதாராமனை காட்டிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நிதியமைச்சர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்.8 சதவீத வளர்ச்சியை தந்த அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி பேசியுள்ளார்.