tamilnadu

img

சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்து DYFI - AIDWA கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமூக விரோதிகளுக்கு ஆதரவாகவும், நியாயம் கேட்ட வாலிபர் சங்கத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து சேலத்தில் வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் எருமாபாளையம் அடுத்துள்ள ஆலமரத்து காடு பகுதியில், குமரன் கார்மெண்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள், வட மாநில தொழிலாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த கார்மென்ஸில் பணியாற்றும் ஆண்கள் சிலர், கழிவறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியில்  மலம் கழித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதும், இங்குள்ள குடியிருப்பில் உள்ள பெண்களிடம் சிலர் பாலியல் அத்துமீறல்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக நியாயம் கேட்க சென்ற வாலிபர் சங்க தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை சிறையிலும் அடைத்துள்ளனர்.  இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என வாலிபர் சங்கத்தினர் கேட்டுக்கொண்ட பிறகும், ஒருதலை பட்சமாக வழக்கு குற்றவாளிகளுக்கு சாதமாக வாலிபர் சங்கத் தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க நிர்வாகியை அழைத்துச் செல்வதற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். 
இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

;