tamilnadu

img

மேட்டூர் உபரி நீரை கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

சேலம், ஏப்.13-மேட்டூர் உபரி நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம்நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்சேலம் நாடாளுமன்றதொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் சனியன்று கொங்கணாபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக காவிரி நீர்ப்பாசன திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கெள்ளப்படும்.மேலும், ஏழை குடும்பத் தலைவி வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் செயல்படுத்தப்படும். விவசாய கடன், கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், மானிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கட்சபள்ளி, கொங்கணாபுரம்,சமுத்திரம், தோரணம் பட்டு, தங்காயூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், திமுக முன்னாள் எம்பி கந்தசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் எம்எல்ஏ காவிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சேகரி உள்ளிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;