tamilnadu

கூலித் தொழிலாளி மரணம் - மனைவியிடம் விசாரனை

இளம்பிள்ளை, மே 19 - சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த கூலித்  தொழிலாளி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவால் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள நடுவ னேரி கிராமம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த மாரி முத்து மகன் அண்ணாமலை(35).  இவர் கோவையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் மனைவி பிரியா (35), மகன் மணிகண்டன்(14), மகள் பவித்ரா (12) ஆகியோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அண்ணாமலை கடந்த ஞாயிறன்று (மே 17) இறந்துள்ளார். இதையடுத்து இறந்த கணவரை அவரது மனைவி பிரியா, மகன், மகள் ஆகியோர் சொந்த ஊரான நடுவனேரி பகுதியில் அடக்கம் செய்வதற்கு திங்களன்று எடுத்துச் சென்றுள்ளனர்.

 அச்சமயம், அண்ணாமலையின் உடலில் ரத்த காயங் கள் இருப்பதை கண்ட உறவினர்கள் இது கொலையாக இருக்கலாம் என கருதி மகுடஞ்சாவடி காவல் நிலையத் திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய் வாளர் சசிகுமார், அண்ணாமலையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உடலில் இரத்த காயங்கள் காணப்பட்ட தால் இவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதன் பின்னர், அண்ணாமலை  இறந்த சம்பவ இடம் கோவை என்பதால் கோவை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்த கோவை காவல் துறையினர் அண்ணாமலையின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோத னைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல ஆயத்தமாகினர். உடற்கூராய்வு முடிந்த பிறகே இது கொலையா? தற்கொலையா? என தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், அண்ணாமலை யின் மனைவி பிரியா முரண்பாடாக கூறி வருவதால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.