சேலம், டிச.7 - சேலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து விலகி தமிழக முதல்வர் தலைமையில் அதிமுகவில் சிலர் இணைந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னி லையில் டிச.6 ஆம் தேதியன்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சிலர் விலகி அதிமுகவில் இணைந்து உள்ளனர் என நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. இச் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம் பானது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருமந்துறை பகுதியை சார்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாக இருந்தபோது பல் வேறு ஊழல் புகார்களின் அடிப் படையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப் பினர் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுவிட்டனர். தற்போது, அவர்கள் அதிமுக வில் இணைந்து உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களுக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் டிச.7ஆம் தேதி வெளியான நாளிதழ்களில் கம்யூ னிஸ்ட் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளனர் என பொய்யான செய்தியை வெளி யிட்டுள்ளனர். இது பத்திரிக்கை தர்மத்திற்கு உகந்தது அல்ல என மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.