tamilnadu

img

ஊழல் குற்றச்சாட்டு தப்பக்குட்டை ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

இளம்பிள்ளை, ஜன. 27- ஊழல் குற்றச்சாட்டால் இளம்பிள்ளை அருகே தப்பக் குட்டை ஊராட்சி  கிராமசபை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக் குட்டை ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மகுடஞ் சாவடி ஒன்றிய குழு தலைவர் லலிதா, தப்பக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயா, ஊராட்சி செயலா ளர் சாந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத் தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இளைஞர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணற்றுகளில் மின் மோட்டார்களைக் காணவில்லை என புகார் தெரிவித்தனர். மேலும், 100-நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்ப தாகவும், கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை  என்றும், தனிநபர் கழிப்பிடம் திட்டத்தில் ஊழல் நடந்திருப் பதாகவும் பொதுமக்கள்  குற்றம்சாட்டி மனு அளித்தனர். மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இப்பகுதியிலுள்ள அரசு  நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். முதி யோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்திற்கு வந்தி ருந்த  மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய  அலுவலர்  சந்துரு விடம் 1000-க்குமேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.  இதனால் இக்கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மகுடஞ்சாவடி ஒன்றிய குழு தலைவர் லலிதா பாதியிலேயே திரும்பிச்சென்றார். இதனையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் சசிகு மார், உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவல் துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தினரை அமைதிப்படுத்த முயன்றனர்.

;