tamilnadu

img

தோழர் சீரங்கன் படத்திறப்பு

 ஓமலூர், ஏப், 28-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தாலுகாகுழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பூசாரிபட்டி தோழர் கே.சீரங்கன் படத்திறப்பு நிகழ்ச்சி ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்ட அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.ஓமலூர் வெண்மணி நினைவகத்தில் தோழர்கே.சீரங்கன் உருவ படம் திறப்பு நிகழ்ச்சி தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே. சேகர், சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே. தியாகராஜன், தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.சின்ராஜ், ஜோதிபாசு, தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;