tamilnadu

img

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு

ஏற்காடு, பிப்.12- ஏற்காட்டில், கொரோனா வைரஸ் குறித்து மாணவர் களிடையே விழிப்புணர்வு நிகழ்வு செவ்வாயன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இதில் ஏற்காடு புனிதஜோசப் பள்ளியில்  மருத்துவ அலுவலர் ராமநாதன் மற்றும் வாழவந்தி சேர்வ ராய் கல்லூரியில் மருத்துவர்கள் விஜயக்குமார் மற்றும் சத்தியசீலன் ஆகியோர் முன்னெச்செரிக்கை நடவ டிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  காப்பாற்ற மருந்து ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை என கூறி, பின்னர் அனைவரும் தங்கள் கைளை  நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைளை  எவ்வாறு கழுவ வேண்டும் என்று செய்து காண்பித்தனர்.  இந்நிகழ்வில் 925 மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற் பாட்டினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வக் குமார் செய்திருந்தார்.