tamilnadu

img

இளம்பிள்ளை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இளம்பிள்ளை, பிப். 2-  இளம்பிள்ளை அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1990-1993. ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு மற்றும் கலந்து ரையாடல் விழா  ஞாயிறன்று நடைபெற்றது. இதில், வெளி நாடு, வெளிமாநிலங்களில் பணிபுரியும்  250 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும் பத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சைவம் மற்றும் அசைவம் விருந்தும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

;