சேலம், நவ.14- அகில இந்திய கூட்டுறவு வார விழா வியாழனன்று சேலம் மாவட் டத்தில் உற்சாக கொண்டாடப் பட்டது. அகில இந்திய அளவில் நவம்பர் மாதத்தில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட் டத்தில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியாக சேலம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் மரம் நடு விழா, கொடியேற்று விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜா என்கிற ராஜசேகர் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தார். மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் மிருளணி உறுதிமொழியை வாசித் தார். கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், பொன்னி கூட் டுறவு மேலாண்மை இயக்குநர் மலர் விழி, கூட்டுறவு அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.