tamilnadu

img

மே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மே மாதம் 2ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்குகிறது. உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 2 ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளத்தில் விண்ணப்பிக்க மே 31ஆம் தேதி கடைசி நாள். ஜூன் 3-ஆம் தேதி இரண்டாம் எண் வெளியிடப்படும் என்றும் ஜூன் 17ஆம் தேதி தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பிக்கும் இணையதள முகவரி நாளை அறிவிக்கப்படும் என உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

;