சென்னை, ஜூன் 16- ஜூன் 17 அன்று வெளியாக இருந்த பொறியியல் கலந்தாய்வுகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரி வித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பு களில் சேருவதற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த ஜூன் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 46 டிஎப்சி சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் இருந்து அனைத்து சரிபார்ப்பு சான்று விவ ரங்களும் சென்னை அலுவலகத்திற்கு கொண்டு வந்து உயர்மட்ட கண்கா ணிப்பு சரிபார்ப்பு பணி நடைபெற உள்ள தால், ஜூன் 17 அன்று வெளியிடப்பட விருந்த தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராமல் இருந்தவர்கள், சரியான சான்றி தழ்களை கொடுக்கத் தவறியவர்கள், இந்த தேதி மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்ற னர். இந்த தரவரிசை பட்டியல் அனைத் தும் மாணாக்கர்கள் பார்வைக்கு 4 நாட்கள் வைக்கப்படும். இதனால் கலந்தாய்வு தேதியும் மாற்றப்பட உள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழ கன் தெரிவித்துள்ளார். ஜூன் 20-ம் தேதி பொறியியல் படிப்பு களில் சேரும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக இருந் தது குறிப்பிடத்தக்கது.