சென்னை,ஜூலை 27- பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன. 4-வது சுற்றின்படி கல்லூரிகளை தேர்வு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து கடிதம் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இதையடுத்து உருவாகும் காலி இடங்க ளுக்கு துணை கலந்தாய்வு ஜூலை 28 ஆம்தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அகா டமி மற்றும் தொழில் பிரிவுகளுக்கு நடக்கும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவர்க ளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. துணை கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி யாக நடத்தப் படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 6 பிரிவுகளாக கலந்தாய்வு நடக்கிறது. கட்ஆப் மார்க் 167.50ல் இருந்து 77.50 வரை மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தொழிற் பிரிவு மாணவர்களுக்கு கட்-ஆப் 102-ல் இருந்து பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கு பெறும் மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) வெப்சைட்டில் இருந்து இணைய தள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தபால் மூலம் அழைப்பு கடிதம் பெறாதவர்க ளுக்கான கட்-ஆப் மதிப்பெண் தேதியில்கலந்தாய் வில் பங்கேற்கலாம் எனவும் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு ஒரிஜினல் சான்றிதழ் மற்றும் அனைத்து நகல் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் முதல் கட்டமாக ரூ.5000-மும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி, அருந்ததி இனத்தவர்கள் ரூ.1000-மும் டி.டி.பெற்று வர வேண்டும். The Secratary, TNEA என்ற பெயரில் டி.டி.யாகவோ, பணமாகவோ செலுத்தலாம். இந்த வருடம் குறைந்த கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.