tamilnadu

விபத்தில் வாலிபர் பலி

அம்பத்தூர், ஜூன் 25-  கொடுங்கையூர் ஓம் சக்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (23). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சுரேஷ்குமார். இருவரும் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். திங்களன்று மாலை 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்த னர். பாடி மேம்பாலம், அக்கர காரம் சிக்னல் அருகே வந்த போது குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது ராஜ சேகர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி யது. பின்னர் அருகில் இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விழுந்தனர். இதில் பலத்த  காயம் அடைந்த ராஜசேகர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உடன் இருந்த அவரது நண்பர் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கி ளில் வந்த கொளத்தூர் தாதங்குப்பத்தை சேர்ந்த சுரேஷ், மனைவி சரிதா ஆகி யோர்காயத்துடன் தப்பினர்.