tamilnadu

img

கழிவறை கேட்டு வாலிபர் சங்கம் போராட்டம்

கழிவறை கேட்டு வாலிபர் சங்கம் போராட்டம்

சென்னை, ஆக. 16 - கழிவறை கேட்டு சனிக்கிழமையன்று (ஆக.16) துறைமுகம் திருவள்ளுவர் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். துறைமுகம் பகுதி, 56வது வட்டம், திரு வள்ளுவர் நகரில் கடந்த ஓராண்டாக கழிவறை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகை யால் அப்பகுதி அருகிலேயே உடனடியாக கழிவறை கட்டித் தர வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டம் நடை பெறும் இடத்திற்கு வந்த 5வது மண்டல செயற்பொறியாளர், கழிவறையை விரைந்து கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கிளைத்தலைவர் கோகுல் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் லோ.விக்னேஷ், பகுதிச் செயலாளர் மகேஸ்வரன், கிளை செயலாளர் சிபி உள்ளிட்டோர் பேசினர்.