tamilnadu

img

கடலூரில் அரசு சட்டக் கல்லூரி ஏற்படுத்துக வாலிபர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கடலூரில் அரசு சட்டக் கல்லூரி ஏற்படுத்துக வாலிபர் சங்க கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கடலூர், செப்.15 - கடலூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்ட 18வது மாநாடு விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சின்னதம்பி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஜே.சிவலோகம் கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைவாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை தலைவர் கே.ஆர்.பாலாஜி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வினோத்குமார் வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கைகளை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் பி.சதீஷ்குமார் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மல்லிகா, வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.எம்.குமரகுரு, மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செங்கதீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் நிறைவுரை ஆற்றினார். தீர்மானம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், கடலூரில் அரசு சட்டக் கல்லூரியை உடனே துவங்க வேண்டும், விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக வினோத்குமார்,  செயலாளராக சின்னதம்பி,  பொருளாளராக கலைவாணன் மற்றும் 21 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர்.