tamilnadu

img

கெலமங்கலம் ஒன்றியத்தில் வாலிபர் சங்க மாநாடு  

கெலமங்கலம் ஒன்றியத்தில் வாலிபர் சங்க மாநாடு  

கிருஷ்ணகிரி, ஜூலை 23- கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு வட்டத் தலைவர் ஹரிஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் திவாகர், முன்னாள் மாவட்டத் தலைவர் அனுமப்பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்டச் செயலாளர் கணேஷ் வேலை அறிக்கை வாசித்தார். இந்த  மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தேன்கனிக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க  வேண்டும் என கோரப்பட்டது. அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தேன்கனிக்கோட்டை அரசு கலைக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையத்திற்கு போதிய பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமித்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கு பயிலும் மாணவர்கள்  வந்து செல்வதற்கு பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இருதுக் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீங்கோட்டை, சம்மந்த கோட்டை, கிரியனப்பள்ளி, ஆலஹள்ளி, போகசந்திரம், பசவனபுரம், தோட்டிக்குப்பம், சின்னர்தொட்டி, பேளாலம், குருபட்டி கிராமங்களில் இருந்து பள்ளிக்கு பல கிலோமீட்டர் நடந்தே வரும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பேருந்து வசதிகள் செய்திட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  கெலமங்கலம் ஒன்றியத் தலைவர் டி.ஹரிஷ், செயலாளர் சி.கணேஷ், பொருளாளர் எஸ்.காவியா உள்ளிட்ட ஒன்றிய குழு  தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் இளவரசன் நிறைவுரை யாற்றினார். வட்டப் பொருளாளர் அருண் நன்றி கூறினார்.