tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இளைஞர் கைது

சென்னை, செப். 25- சென்னை கோயம் பேட்டில் இருந்து பூந்த மல்லி நோக்கி ஒரு மாநகர பேருந்து புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்து சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது, அங்கு வந்த ஒரு இளைஞர் பேருந்தின் மீது கற்களை வீசினார். இதில் பேருந்து பின்புற கண்ணாடி உடைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் அலெக்ஸாண்டர் பேருந்தில் இருந்து இறங்கி, தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார். பின்னர் அந்த இளைஞரை கோயம்பேடு காவல் நிலை யத்தில் ஒப்படைத்து, அலெக்ஸாண்டர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  இளைஞரிடம் விசாரணை செய்தனர்.  விசாரணையில் அவர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்  (39) என்பது தெரியவந்தது. இதை யடுத்து காவல் துறையினர் பிரசாந்தை கைது செய்த னர்.

விண்ணப்பங்கள் வெளியீடு

வேலூர், செப்.25- கைவினைப் பொருட்கள் செய்யக்கூடிய  கைவினை ஞர்களுக்காக, கைவினைஞர்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழில் தேர்வு மையம் இந்த ஆண்டுக்கான தனிப்பட்ட கலைஞர்களுக்கு விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் (ரூ.200) செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, குறிப்பிட்டுள்ள மாவட்ட பயிற்சி அளிக்கும் தொழில் பயிற்சி நிலைய முதல்வரிடம் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதலில் கருத்தாய்வு தேர்வு 04.11.2025 அன்றும், செய்முறைத் தேர்வுகள் 05.11.2025 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். தேர்வாளர்கள் அக்டோபர் 8 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skill training.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கோயிலில் திருடிய இளைஞர் கைது

அம்பத்தூர், செப். 25- சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்தனர். நொளம்பூர் 7ஆவது குறுக்கு தெருவில் சர்வ சக்தி மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 23ஆம் தேதி அத்து மீறி நுழைந்த ஒரு நபர், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினார். மேலும் கோயிலில் இருந்த பொருட்களையும் திருடிவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில், நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த தினகரன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து தினகரனை வியாழக்கிழமை கைது செய்தனர்.