tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்களுக்கு  உழைப்போர்  உரிமைகள்  இயக்கம் நன்றி

சென்னை, ஆக.28- உழைப்போர்  உரிமைகள் இயக்கம் சிபிஎம், சிபிஐ கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மண்டலம் 5 மற்றும் 6 இல் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமைகள் இயக்கம் ரிப்பன் கட்டிட நுழைவாயிலில் அமைதியான போராட்டத்தை நடத்தியது.   இந்தப் போராட்டம் தொடர்பாக, ஆக.14 அன்று காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வன்முறையைக் கண்டித்தும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும், சென்னை மாநகராட்சி கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் சார்பாக, தொழிலாளர் உரிமைகள் இயக்கம் சார்பாகவும் இந்த கட்சிகளின் கவுன்சிலர்களுக்கு  உழைப்போர் உரிமை இயக்கம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த இயக்கத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

தர்பூசணி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, ஆக.28- திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்து உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டமடைந்த விவ சாயிகள் தமிழக அரசை கண்டித்து  தர்பூசணி பழங்களை சவக்குழியில் புதைத்து இறுதிஅஞ்சலி செலுத்தும்  நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்தாண்டு உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ஒருவர் தர்பூசணியில் கலர்வர ஊசி மூலம்     செலுத்துகிறார்கள் என்ற தவறான தகவலை பரப்பிய தால் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான தர்பூசணி ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் 80  ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு தர்பூசணி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கர்ருக்கு ரூ 20 ஆயிரம் இழப்பீட்டு  தொகையும்  வழங்க அரசு பரிந்து ரைத்தும் இதுவரை வழங்கவில்லை, திரு வண்ணாமலை மாவட்ட த்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு   உழவு மானிய மாக ஏக்க ருக்கு ரூ 800 விகிதம் ரூ 1 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால்    வேளாண்மை துறை எந்த ஒரு விவசாயிகளுக்கும்   இதுவரை வழங்கவில்லை. தர்பூசணி சாகுபடியால் நஷ்டமடைந்த வெளுங்க நந்தல் பரணி என்ற விவ சாயின் தர்பூசணி தோட்ட த்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் இந்த  போராட்டத்தில் ஈடுபட்டனர்.