tamilnadu

பேருந்துகளை இயக்காததற்கு யார் காரணம்? அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் கேள்வி

சென்னை, ஜூன் 16 - பேருந்துகளை கூடுதலாக இயக்காததற்கு தொழிலாளர்களை குற்றம் சாட்டியுள்ள மாநகர போக்கு வரத்து கழகத்திற்கு அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் வெளி யிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3233 பேருந்துகள் 604  வழி தடத்தில் தினசரி இயக்கப்படு வதாகவும், ஓட்டுநர், நடத்துனர்கள் முன்னறிவிப்பின்றி பணிக்கு வராத காரணத்தால் சில வழித்தடங்களில் பேருந்து இயக்க முடியாத நிலை உள்ளது எனவும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக தின மலர்  ஜூன் 16) நாளிதழில் செய்தி வெளி யாகி உள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 - 2020ஆம் ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், மாநகர போக்குவரத்து கழகத்தில் சுமார் 3500 தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப ஊழியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதிமுக ஆட்சியின்போது ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 400 பேரும், திமுக ஆட்சியில் 300க்கும் மேற்பட்டோரும் மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து பிற  கழகங்களுக்கு இடமாற்றலாகி உள்ள னர். 2020ஆம் ஆண்டு அதிமுக அரசு  பணி ஓய்வு வயதை 58லிருந்து 59 என வும், பின்னர் 60 எனவும் உயர்த்தியது. பணி ஓய்வு வயது அதிகரிப்பு தொழி லாளர்களிடத்தில் கடும் பாதிப்பை உரு வாக்கி உள்ளது.

அதிகாலையில் பணிக்கு வரும் 59 - 60 வயதான ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போது உயிரிழப்பு விபத்து ஏற்பட்டால், ஓட்டுநர் உரிமம் பறிப்பு,  தற்காலிக பணி நீக்கம் செய்யப்படு கிறார். தொழிலாளி மீது தவறு இல்லை யென்றாலும் இழப்பீட்டு தொகை பிடித்தம் செய்வதோடு, 3 ஆண்டு தண்டனை விதிக்கப்படுகிறது. பணிக் காலம் இல்லையென்றால், இழப்பீட் டிற்கான தொகையை செலுத்த வற்புறுத்துகின்றனர். மேலும், குற்ற வியல் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கின்றனர். இத்தகைய காரணங்க ளையெல்லாம் மறைத்துவிட்டு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வரவில்லை என ஊடங்கள் வாயிலாக தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. பேருந்தின் ஆயுள் காலம் 6 ஆண்டு கள் அல்லது 7 லட்சம் கி.மீ என்பதை,  9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ என மாற்றியுள்ளனர். மாநகரப் போக்கு வரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 60 விழுக்காடு 8 ஆண்டு களை கடந்தவை. இதனால் பழைய பேருந்துகள் அதிகம் பழுதடைகின்றன. பழுதடையும் பேருந்துகளுக்கு உதிரிபாகங்களை வாங்க நிர்வாகம் நிதி ஒதுக்குவதில்லை. குறிப்பாக, சிவப்பு நிற பேருந்து களில், பிரேக், ஏர் லீக், தானியங்கி டோர் போன்ற குறைபாடுகள் உள்ளன.  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்கவும், கட்டணமில்லா  பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக் கைக்கேற்ப தொழிலாளர்களுக்கு சிறப்பு பேட்டா வழங்கவும் நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. போராடும் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காணாமல், தொழிலாளர்களை குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். நிர்வாகத்தின் இத்தகைய தவறு களை கண்டித்து வெள்ளியன்று (ஜூன்  17) பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க  போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;