tamilnadu

img

வண்ணத்துப் பூச்சிகள் எங்கே போகின்றன?

சென்னை, ஜூலை 25- “குழந்தைப் பருவம் குதூகலமாய், வண்ணத்துப்பூச்சி களாய் விளையாடி துள்ளித் திரியும் காலம். பள்ளி சென்று பயில வேண்டிய காலம். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமை களைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நமது கடமை” தமிழக பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் இது:  தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கிய ஆவணத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வரும் அதிர்ச்சித் தகவல் இடம் பெற்றிருப்பது மேலே சொன்ன ‘வண்ணத்துப்பூச்சிகளின்’ சிறகு களை ஒடிப்பதாக இருக்கிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 37 ஆயிரத்து 538 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் 12,30,278 மாண வர்கள் படித்துள்ளனர். 6 முதல் 8  வரையிலான நடுநிலைப் பள்ளி களில் 8,97,479 மாணவர்கள், ஒன்பது முதல் பத்து வரையிலான உயர் நிலைப் பள்ளிகளில் 5,63,253 மாண வர்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு களில் 19,69,955 மாணவர்கள் என 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாண வர்கள் அரசுப் பள்ளிகளில் படித்துள்ளனர். 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 100 உயர்ந்த போதும் 44,13,336 மாண வர்கள் மட்டுமே கல்வி பயின்று ள்ளனர். அந்த கல்வியாண்டில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 629 மாணவர்கள் குறைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளி களின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டத்தில் குறைந்துள்ள தோடு மாணவர்கள் எண்ணிக்கை யும் வெகுவாக சரிந்துள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் (2018-19) மாணவர்களின் எண்ணிக்கை 8,357 ஆக குறைந்து உள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வியில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 618 மாணவர்கள் படித்துள்ளனர். மேல்நிலை வகுப்புகளில் 13 லட்ச த்து 83 ஆயிரத்து 130 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றுள்ளனர். 

அமோக வியாபாரம்

2017-18 ஆம் கல்வியாண்டில் சுயநிதி பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 730. அங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 71 ஆயிரத்து 543. அடுத்த கல்வியாண்டில் 2018- 19 ல் அந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 12,918 என்றும் மாணவர்களின் எண் ணிக்கை 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 12,10,055 மாண வர்கள் எண்ணிக்கை உயர்ந்துள் ளது. 

அபாயச் சங்கு

2017-18 ஆம் ஆண்டுகளில் வெளியான புள்ளி விவரங்களுடன் 2018-19 ஆம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால் அரசுப் பள்ளிகளில் 4.25 லட்சம் மாணவர்கள் குறைந்த நிலையில், தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 12.10 லட்சமாக அதிகரித்துள்ளது.  இந்த பின்னணியில் “தமிழ கத்தில் 1,748 அரசு பள்ளிகள் மூடப் படுவதாகவும் அந்த இடங்களில் நூலகங்கள் அமைக்க அரசு முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த தகவல் உண்மை தானா என முன்னாள் பள்ளி கல்வி அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேரவையில் கேள்வி எழுப்பினார்.

‘கொக்கு தலையில் வெண்ணெய்’...

அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “அந்தத் தகவல் உண்மையல்ல.  அரசுப் பள்ளிகளை மூடுவது அரசின் கொள்கை அல்ல. மூடப்படும் என்ற  பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாணவர் கூட சேராத 45 அரசுப் பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளைத் தான் நூலகமாக மாற்ற முடிவு செய்திருக்கிறோம். அதுவும் தற்காலிகம்தான்” என்றார். ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும். அப்போது மாணவர்கள் சேர்ந்தால் மீண்டும் திறப்பார்களா என்பதற்கு பதில் இல்லை. அரசுப் பள்ளிகள் எங்கும் மூடப்படவில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை யாகிவிடும் என்று அரசு கருது கிறது. தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரமும், மாண வர்கள் எண்ணிக்கையும் உயர்த்தி வருகிறோம் என மாநில அரசும், அமைச்சரும், அதிகாரிகளும் மாறி மாறி கூறினாலும் உண்மை வேறாகத்தான் இருக்கிறது.

தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு