tamilnadu

img

ஏழு நிமிடச் சந்திப்பில் என்ன பேசினார்கள்..?

சென்னை:
ஜூன் 15 ஆம் தேதி தில்லியில் நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்காக தில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஆயோக் கூட்டம் தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் ஆலோ சனை நடத்தினார். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் பிரதமரிடம் சமர்ப்பித்தார். குறுகிய நேரம் மட்டும் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலேயே புறப்பட்டுச் சென்றார்.

அந்த குறுகிய நேரம் என்பது வெறும் ஏழு நிமிடங்கள்தான் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. நிதி ஆயோக் கூட்டத்துக்கு முன் பல மாநில முதல்வர்கள் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்த னர். அந்த வகையில்தான் தமிழக முதல்வ ருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த ஏழு நிமிடங்களில் பூங்கொத்து கொடுத்தல், சால்வை அணிவித்தல், பரஸ்பரம் நலம் விசாரித்தல் போன்ற வற்றுக்கே மூன்று நிமிடங்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழக கோரிக்கைகள் பற்றிய கோரிக்கை மனுவை அளித்தது, அது தொடர்பாக பிரதமரிடம் உரையாடியது என்று பார்த்தால் மீதியிருக்கும் நான்கு நிமிடங்களில்தான் என்கிறார்கள் தில்லி பத்திரிகை யாளர்கள்.

மேலும் அவர்கள், “வழக்கமாக பிரதமரை சந்திக்க செல்லும்போது குறைந்த பட்சம் கால்மணி நேரத்துக்கும் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார் பிரதமர். சில முக்கிய விஷயங்களை அப்போது அழுத்தம் திருத்தமாக பேச வாய்ப்பு ஏற்படும். ஆனால் இம்முறை வெறும் 7 நிமிடத்தில் சந்திப்பு முடிந்துவிட்ட தால்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தத்துக்கு ஆளாகி அங்கிருந்து வெளியே வரும்போது செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை” என்கிறார்கள்.நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லும் அவசரத்தில் பிரதமர் இருந்ததால்தான் இந்த குறுகிய அளவு நேரம் ஒதுக்கப்பட்டது என்றும், எல்லா முதல்வர்களுக்கும் ஏழு நிமி டங்கள்தான் என்றும் தில்லி தரப்பில் தமிழக முதல்வரிடம் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

;