மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் அடிமனை பயனாளிகளை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்த வேண்டும், பயனாளிகளிடம் சட்டவிரோதமாக முன்பணம் மற்றும் வாடகை வசூலித்த மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக 19) ஐந்து விளக்கு சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தி.நகர் பகுதிச்செயலாளர் எம்.குமார், சங்கத்தின் மாநிலத் தலைவர் வ.செல்வம், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.