tamilnadu

img

வரவேற்கத்தக்க அம்சங்களை கொண்ட வேளாண் நிதிநிலை அறிக்கை!

சென்னை, பிப்.20- 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வரவேற்புக்குரிய பல்வேறு திட்டங்  கள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரி வித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர்  சாமி.நட ராஜன் இது தொடர்பாக விடுத்  துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 4-ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு வேளாண் நிதி அறிக்கையை விட  இந்த பட்ஜெட்டில் 3377 கோடி ரூபாய்  கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டு வேளாண்  நிதிநிலை அறிக்கையில் புதிய பல  திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மண்வளத்தை பாதுகாப்ப தற்காக முதலமைச்சரின் ‘மண்ணு யிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதேபோல் இயற்கை விவ சாயத்தை மேம்படுத்துவதற்காக வும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காகவும், தரமான இயற்கை விதை நெல்லை பரவ லாக விவசாயிகளுக்கு வழங்குவதற்  கான நடவடிக்கைகள் மேற்கொள்  ளப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

குறிப்பாக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிறு தானியங்கள் உற்பத்தி செய்யும் விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், உற்  பத்தி செய்யப்படும் சிறுதானியங்  களை விவசாய உற்பத்தியாளர்கள்  குழு மூலம் கொள்முதல் செய்யப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்க ரூ. 16,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தேன் உற்பத்தி, தேன் பரிசோதனைக்  கூடம், தேன் சார்ந்த பொருட்களை  பதப்படுத்திட தேனீ முனையம் துவங்  கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற பல திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் வர வேற்கிறோம்.  

இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.

நெல், கரும்புக்கு ஊக்கத்தொகையை உயர்த்தாதது ஏமாற்றம்
உற்பத்திச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், நெல், கரும்பு ஆகியவற்றிற்கு மாநில அரசு வழங்கி வரும்  ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு அதுகுறித்து புதிய அறிவிப்புகள் இல்லா தது ஏமாற்றமளிக்கிறது. 

எனவே, ஊக்கத் தொகை சம்பந்தமான விஷயத்தில் மாநில அரசு  கவனத்தில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000, கரும்பு டன்னுக்கு  ரூ. 4000 என அறிவித்திட வேண்டுகிறோம். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில்  தனியார் நிறுவனங்கள் கூடுதலாக லாபம் அடைகின்றன. மாநில அரசு  தனியாக பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தை துவங்க வேண்டும் என்று பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் வலியுறுத்தின. ஆனால் அது  சம்பந்தமான அறிவிப்பு இல்லாதது சரியல்ல என்பதையும் சுட்டிக்காட்டு கிறோம்.