மின்துறையை தனியார் மயமாக்க விடமாட்டோம்! புதுச்சேரி சிறப்பு கருத்தரங்கில் தீர்மானம்
புதுச்சேரி, செப்.6- புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார்மய மாக்க விடமாட்டோம் என சிறப்பு கருத்தரங்கத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். புதுச்சேரி அரசின் மின்துறையை தனியாரிடம் தாரைவார்க்க ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மின் நுகர்வோர், மின்துறையில் பணிபுரிகின்ற பொறியாளர் கள் மற்றும் மின்துறை ஊழியர்கள் அரசின் இந்த முடிவை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மின்துறையை தனியார் நிறு வனமான அதானி நிறுவ னத்திற்கு தாரை வார்க்கும் வகையில் ஆளும் அரசு சட்டத்திற்கு புறம்பாக சில தினங்களுக்கு முன்பு டெண்டரை கால நீடிப்பு செய்துள்ளது. அரசின் இந்த நயவஞ்சகத்தை எதிர்த்தும், மின் துறை தொடர்ந்து அரசின் கட்டுப் பாட்டிலேயே இயங்க வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம், புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கட்டிடத்தில் சனிக்கிழமையன்று (செப்.6) நடைபெற்றது. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கருத்த ரங்கத்திற்கு, புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் கார்ப்பரேசன் எதிர்ப்புமய ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பொறியாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க தலைவர்கள் கண்ணன், சேக்கிழார், மூர்த்தி, சம்பத், ஜெய்சங்கர், அருள்செல்வன், தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவின் பொதுச்செயலாளர் வேல்முருகன், ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்க ளின் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன் மற்றும் மனித் கோவிந்தராசு ஆகியோர் பேசினர். தனியார்மய எதிர்ப்புப் போராட்டக்குழுவில் இணைந்துள்ள சங்கங்க ளின் பொறுப்பாளர்கள் தனிகைவேலன், உத்தி ராடம், ரவிச்சந்திரன், பாரத்குமார், திருமூர்த்தி, முருகன், சரவணன், கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட திரளான மின்துறை ஊழியர்கள், மின் நுகர்வோர்கள் கருத்த ரங்கத்தில் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை ஒருபோதும் அனு மதிக்க முடியாது, அதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.