குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்
சென்னை, ஜூலை 2- ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பணிமனை அலுவலகம் – 58, எழும்பூர், வென்னல்ஸ் சாலையில் தற்போது இயங்கி வந்தது. இந்த அலுவலகம் புதன் முதல் வேப்பேரி, ஈ.வி.கே சம்பத் சாலை, எண்.75ஏ என்ற முகவரியில் செயல்படும். எனவே, பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் தெரிவிக்கவும் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்தவும் இந்த புதிய முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துணை பகுதிப் பொறியாளரை 8144930214 என்ற எண்ணிலும், உதவிப் பொறியாளரை 8144930058 என்ற எண்ணிலும், பணிமனை மேலாளரை 7824890058 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச்சலுகை நீட்டிப்பு
காஞ்சிபுரம், ஜூலை 2- காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணச் சலுகை பழைய அட்டை வைத்திருப்போர் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை பயணம் செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும் (ம) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 2024-2025 (31.03.2025 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்கள், 30.09.2025 வரை மேலும் நீட்டித்து மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் காஞ்சிபுரம் முகவரி மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு சென்னை, ஜூலை 2 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1200 அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது.
அகில இந்திய டேபிள் டென்னிஸ்: எத்திராஜன் வாகை சூடினார்
ஏலகிரி, ஜூலை 2- வேவ்லைப் சார்பில் டேபிள் டென்னிஸ்போட்டி ஏலகிரி அரசு விளையாட்டு மைதானத்தில் ஜூன் 27,28 & 29 தேதிகளில் நடைபெற்றது. அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட வீரர்கள்கலந்து கொண்டனர். சென்னைவீரர் இரா. எத்திராஜன் லீக் போட்டி யில்சிங்கப்பூர் வீரர் வரதராஜன் (30), மேற்கு வங்க வீரர் சுப்ரத் தத்தா (31), வேலூர் வீரர் சசிகுமார் (3-0) வீரர்களை வென்று கால்இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.கால்இறுதி போட்டியில் சென்னை வீரர் சத்திஸ் குமார் 3-1, அரை இறுதியில் தாஹர் (ஐதாராபாத்) 3-2என்ற செட்களில்எத்திராஜன் வெற்றிபெற்றார். இறுதி போட்டியில் எத்திராஜன்(சென்னை)3-0 என்ற செட்களில் கல்யாணராமனை (மதுரை) வென்று எத்தி ராஜன் சாம்பியன் கோப்பையை வென்றார். வெற்றி பெற்ற வர்களுக்குவேவ் லைப் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் பரிசுகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை அமைக்க அனுமதி
சென்னை, ஜூலை 2- காஞ்சிபுரம், தேவராஜசாமி கோயிலில் ஆகம விதிகளுக்கு முரணாக, கோயிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி தாத்தாதேசிகர் திருவம்சத்தார் சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், கோயிலின் கருவறைக்கும், வெளி பிரகாரத்துக்கும் இடையில் நடைமேம்பாலம், கருவறை செல்லும் ஆறு படிகளுக்கு பதில் சாய்தளம் அமைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இவை, அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் செயல் அறங்காவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருவறைக்கு செல்லும் ஆறு படிகளும் செங்குத்தாக உள்ளதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளால் ஏற முடியாத நிலை உள்ளது. தற்காலிகமாக சாய்தள பாதை அமைக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யவும், அவசர காலங்களில் பக்தர்கள் எளிதில் வெளியேறவும் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.இவை ஆகம விதிகளுக்கு எதிரானதல்ல. சன்னதி, தெய்வம், ஓவியங்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாய்தள பாதை, நடை மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து வழக்கை முடித்துவைத்தார்.
ஆவடியில் 72 மாடுகள் ஏலம்: மாநகராட்சி நிர்வாகம் முடிவு
அம்பத்தூர், ஜூலை 2- ஆவடி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 72 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளை உரிமை யாளர்கள் அபராதம் செலுத்தி பெறாததால், ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆவடி மாநகராட்சி பகுதியில் நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த மாடு களை கடந்த மே 23 முதல் மாநகர நல அலு வலர் வீ.ராஜேந்திரன், மாநகராட்சி துப்புரவு அலுவலர் முகைதீன், குமார் தலை மையில் ஊழியர்கள் பறிமுதல் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிடிஹெச், புதிய ராணுவ சாலை, வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு சாலை, கோயில்பதாகை நெடுஞ்சாலை, அண்ணனூர், காமராஜ் நகர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தடவைகள் மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில் 92 மாடு கள் பிடிக்கப்பட்டு காஞ்சிபுரத்திலுள்ள கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 20 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுச் சென்றனர். இதன் வாயிலாக ரூ.1.20 லட்சம் அபராதம் வசூ லிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, மீதமுள்ள 72 மாடுகளுக்கான அபராதம் செலுத்தப்பட வில்லை. இதையடுத்து அடுத்த வாரம் மாடுகள் ஏல விடப்படும். அதற்குள் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
கடன் தொல்லை: 2 மகன்களுடன் தந்தை தற்கொலை!
சென்னை, ஜூலை 2- புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் 10ஆவது தெரு ரங்கா அவென்யூ சந்திப்பு பகுதியில் வசித்தவர் செல்வராஜ் (57). மாதவரத்தில் டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்தார். 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்கள், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். செல்வராஜ் மனைவி மாலா. இதயா (16) என்ற மகள், சுமன்ராஜ் (15), கோகுல்ராஜ் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சுமன்ராஜ் அதே பகுதி யில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பும், கோகுல்ராஜ் 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை காலை யாரும் எழுந்து வெளியே வராததால், செல்வ ராஜின் மனைவி மாலா இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, வாயில் நுரை தள்ளியபடி 3 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக 2 மகன்களுக்கு விஷம் கொடுத்ததோடு செல்வராஜூம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்