சென்னை, ஏப்.26 - விவசாய விளைபொருட்களை பாது காத்து வைப்பதற்கும், அவற்றின் மீது கடன் பெறுவதற்குமான சலுகைகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பாதிப்பால் விளைபொருட்களை விற்ப னைக்கு எடுத்துச் செல்வதிலுள்ள பிரச்ச னைகளைப் போக்கிட அரசு உரிய நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் விளைபொருட்களை அரசு கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிகவிலை கிடைக் கப்பெறும் காலங்களில், விளை பொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்யலாம். மேலும் காய்கறி கள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்ட ணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள், காய்கறி கள் உள்ளிட்ட விளைபொருட்களை விவ சாயிகள் விற்பனை செய்யும்போது, வியா பாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 விழுக்காடு சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போது நிலவிவரும் சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வ தற்காக, வியாபாரிகள் செலுத்தும் 1 விழுக்காடு சந்தைக் கட்டணம் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டி ருந்தது. இந்தச் சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.