tamilnadu

img

இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

விளையாட்டுப் பிரிவு வாரியான காலியிடங்கள்:

1. கூடைப்பந்து - 3 (ஆண்)

2. கிரிக்கெட் -2 (ஆண்)

3. ஹாக்கி -4 (ஆண்)

4. வாலி பால் (செட்டர், அட்டாக்கர் அல்லது பிளாக்கர்) - 2 (ஆண்)

 

பணி: கிளார்க்

சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் ஜூனியர், சீனியர் நேஷனல்ஸ், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: அதிகாரி

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி: ரஞ்சி கோப்பை அல்லது துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 1.7.2023 தேதியின்படி, 18 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100. இதர அனைத்து பிரிவினரும் ரூ.700 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.9.2023

மேலும் விவரங்கள் அறிய https://indianbank.in/wp-content/uploads/2023/08/Detailed-advertisment-for-recruitment-of-Sportspersons-2023.pdf