tamilnadu

img

ஐஎம்நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐஎம்நியோ நிறுவனத்துடன் விஐடி  பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், ஆக.21- வேலூர் விஐடி பல்கலைக்கழகம் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவன மான ஐஎம்நியோ நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழக வளா  கத்தில் துணைத் தலைவர் சேகர் விசுவ நாதன் தலைமையில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், தொடர் தொழில்முறை மேம்பாட்டு மைய இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார் மற்றும் ஐஎம்நியோ நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டி.பி.செந்தில்குமார், மனிதவள வணிக பங்குதாரர் ஹரிஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐஎம்நியோ நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் படிப்பைத் தொடர் கற்றல் முறைக்கு வழிவகுக்கிறது. மேலும் தொழில்துறை எதிர்பார்க்கும் வேலை  வாய்ப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு திறன்களை உள்ளடக்கி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம், கல்வித்துறை மற்றும் தொழில்துறை இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாகும்.  இதன் மூலம் மாண வர்கள் செய்முறை மற்றும் கற்றல் மேம்பாட்டு அறிவை பெறுவதை உறுதி செய்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்கும் விஐடி பல்கலைக்கழகத்தின் இலக்குடன் வடி வமைக்கப்பட்டுள்ளது.