tamilnadu

img

விழுப்புரம் காதி கிராப்ட் தீபாவளி விற்பனை தொடக்கம்

விழுப்புரம் காதி கிராப்ட் தீபாவளி விற்பனை தொடக்கம்

விழுப்புரம், அக்.2- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்து ள்ள காதிகிராப்ட் விற்பனை யகத்தில் தீபாவளி விற்பனை தொடங்கியது. ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி காதிகிராப்ட் தீபாவளி விற்பனை மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி வியாழக்கிழமை காந்தியடிகளின் 157ஆவது பிறந்தநாளையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, தீபாவளி முதல் விற்பனையை ஆட்சி யர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சி யில் உதவி இயக்குநர் அன்பழ கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.