விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூறு நாள் வேலையை மீண்டும் வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் சி.அழகுநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட, வட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயத் தொழிளாலர் சங்கம் சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் பி.விநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.