tamilnadu

குஷ்புவைக் கண்டிக்கிறார் விஜயதாரணி

தமிழக அரசு வழங்கும் மகளிர் உரி மைத் தொகை ரூ. 1000-ஐ பிச்சைக் காசு என்று பாஜக-வைச் சேர்ந்த நடிகை  குஷ்பு கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்தில் கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஷ்புவின் உருவ  பொம்மையை எரித்து பெண்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் பாஜக-வில்  சேர்ந்த விஜயதாரணியும், குஷ்புவின் கருத்  தைக் கண்டிக்கும் விதமாக பேட்டி அளித் துள்ளார். அதில், “மகளிர் உரிமைத் தொகை  மட்டுமல்ல பெண்களுக்கான எந்தத் திட்ட மாக இருந்தாலும் அதை நிராகரிக் கக்கூடாது. பெண்களுக்கான திட்டங் களை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க  வேண்டும். மாநில அரசு கொடுப்பது எது வாக இருந்தாலும். அது பெண்களுக்குப் போய்ச் சேரட்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பாரபட்சம் களையப்பட்டு, அனைத்  துப் பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.