tamilnadu

img

தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவான வெயில்

தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.  மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனைத் தாண்டி  பதிவானது. ஏப்ரல் மாதத்திலும் நாளொன்றுக்கு  குறைந்தது 4 பகுதிகளிலாவது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகிவருகிறது.

அந்தவகையில், இன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ஈரோடு,  கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

அதிபட்சமாக மதுரை நகரில்  102.48 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவானது.  அடுத்ததாக  கரூர் மாவட்டம் பரமத்தியில் 102.2 ஃபாரன்ஹீட் டிகிரியும், ஈரோட்டில் 101.48 ஃபாரன்ஹீட் டிகிரியும், திருச்சியில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

;