விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று (டிச.26) சென்னையில் நடைபெற்றது. இதில் பெரியார் ஒளி விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் பேரா.அருணனுக்கும், காமராசர் கதிர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும், செம்மொழி ஞாயிறு விருது ஆய்வாளர் ரெ.பாலகிருஷ்ணனுக்கும், அம்பேத்கர் சுடர் விருது எழுத்தாளர் காஞ்சா அய்லையாவுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது வை.பாலசுந்தரத்திற்கும், காயிதேமில்லத் பிறை விருது டி.எம்,உமர்பாரூக்கிற்கும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.